இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!!!!
கூகுள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் கலிஃபோர்னியாவில் ஆயிரத்து 800 பேரை வேலையில் இருந்து அந்த நிறுவனம் தூக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூகுளில் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து தூக்குவதாக அறிவித்த கூகுள் தற்போது மேலும் 1,845 பேரை தூக்கியுள்ளது. இது கலிஃபோர்னியாவில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையில் 15% ஆகும். கடும் நிதிநெருக்கடி மற்றும் மெதுவான வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள கூகுள் நிறுவனம், அண்மையில் நடந்த கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் கூட்டம் குறித்தும், பணியாளர்கள் நீக்கம் குறித்தும் அதன் சி.இ.ஓ.சுந்தர்பிச்சை விளக்கம் தெரிவித்தார்.
முந்தைய காலகட்டங்களில் சரியாக வேலை செய்யாமல் இருந்திருந்தால் அவர்களை நீக்குவதாக நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். 6 சதவிதம் பேரை தூக்கியுள்ள கூகுள் நிறுவனத்தின் செயலால் பெரும்பாலான இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இந்த சூழலில் 12 ஆயிரம் பேரை மட்டும் தூக்கினால் போதாது முடிந்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும்படி கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அழுத்தம் தருவதால் கூகுள் நிறுவனம் இந்த முடிவுகளை எடுத்து வருகிறது.