வரியை உயர்த்த இது தான் நேரமா? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
இந்தியாவில் பணவீக்கம் 7 சதவிதத்திற்கு அதிகமாக இருக்கும் போது பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில், மக்கள் மீது வரி சுமையை அதிகரிப்பது கொடூரமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஒரு பொருளை பிராண்ட் செய்து, லேபில் செய்வதற்கும், pack செய்து லேபில் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்று கூறியுள்ளார். முதலில் இருப்பது, பெரிய நிறுவனங்களின் பொருட்களில் தான் மாற்றத்தை கொண்டு வரும். இந்த பொருட்களை நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்கள் தான் வாங்குவாரகள். ஆனால் pack செய்து லேபில் செய்து விற்பனை செய்யும் பொருட்களை, ஏழைகள் தான் பெரும்பாலும் வாங்குவார்கள். இதன் மீது வரி என்பது சிறு நிறுவனங்களை முற்றிலும் ஒழித்துவிடும் என்று கூறியுள்ளார். ஏன் ஏழைகள் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க கூடாதா? சுத்தமான, தரமான பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணமே தவறு என்று மோடி அரசு கூறுவது போல் இந்த வரி விதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசாங்கம் கூறியது வரி விதிப்பு என்பது, அனைத்து மாநிலங்களும் ஒன்று கூடி, ஒருமனதாக நிறைவேற்றும் என்பது தான். ஆனால் அது தற்போது ஒருமித்த கருத்தாக மாறி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக, இந்த வரி உயர்வு செய்யப்பட்டுள்ள கால நேரத்தை கவனிக்க வேண்டி உள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கம் 7 சதவிதத்திற்கும் அதிகமாக இருக்கிறது, மொத்த விலை பணவீக்கம் 15 சதவித்திற்கும் அதிகமாக இருக்கிறது, வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் உள்ளது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருக்கிறது, அது மட்டுமல்லாமல், நடப்பு கணக்கு பற்றாக்குறை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது, இது சர்வதேச அளவில் பணவீக்கத்தை இனி வரும் நாட்களில் மேலும் உயர்த்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், மக்கள் மீது கூடுதல் வரியை சுமத்துவது மிக கொடூரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.