5 ஆண்டுகளில் அது நடக்கும்!!!
கிறிஸ் உட் ஜெஃப்ரீஸ் என்பவர் வியூகங்களை வகுப்பதில் வல்லவராக திகழ்கிறார். இவர் அண்மையில் இந்திய பங்குச்சந்தைகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது தற்போது உள்ள இந்திய பங்குச்சந்தை புள்ளிகளின் அளவானது அடுத்து 5ஆண்டுகளில் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளாக உயரக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் உறுதித்தன்மையுடன் இருக்கும் பங்குச்சந்தைகளில் இந்திய பங்குச்சந்தைகள் வலுவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் 2 முக்கியமான சவால்கள் இந்திய பங்குச்சந்தைகள் முன்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக அடுத்தாண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் பிரதமராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதமராக மீண்டும் மோடி வரும் பட்சத்தில் எந்த பிரச்னைகளும் இல்லாமல் பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. ஆனால் வேறு யாராவது வந்தால் அது சற்று பாதகமாக வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார். மற்றொரு பிரச்சனையாக, சில்லரை முதலீட்டாளர்கள் அளவு குறைந்து வருவதும் கவலை கொள்ள வைக்கும் பிரச்சனை என்கிறார் கிறிஸ் உட். கடந்தாண்டு ஜூன் மாதம் 38 மில்லியனாக இருந்த சில்லறை டீமாட் கணக்குகள், ஏப்ரல் 2023-ல் 31 மில்லியனாக குறைந்திருக்கிறது.