நீலக் கலர் பாக்கெட்டில் பட்டர் பிஸ்கட் விற்க ஐடிசிக்கு தடை…
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் வாடிக்கையாளர்களை குழப்பும் வகையில் ஐடிசி நிறுவனம் தனது பிஸ்கட்டுகளை விற்பதாக புகார் எழுந்தது. பிரிட்டானியா நிறுவனத்தின் குட் டே பட்டர் குக்கீஸின் பிஸ்கட் பாக்கெட் போலவே நீல நிற பாக்கெட்டில் சன்பீஸ்ட் மாம்ஸ் மேஜிக் என்ற பிஸ்கட் விற்கப்படுகிறது என்பது புகார். பிரிட்டானியா நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும்,வணிகத்தை பாதிக்கும் வகையில் நீல நிறத்தில் பிஸ்கட் பாக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டானியா நிறுவனம் வழக்கில் குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த வழக்கில் ஏற்கனவே உள்ள பிஸ்கட்டுகளை மட்டும் விற்கவும், நீல நிறத்தில் மாம்ஸ் மேஜிக் பிஸ்கட்டுகளை பாக்கெட்டுகளில் அடைக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. காப்புரிமையை மறியதால் 65 லட்சம் ரூபாய் அளவுக்கு வணிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டானியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறது. ஆனால் தங்கள் நிறுவன பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கும், பிரிட்டானியா நிறுவன பாக்கெட்டுக்களுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக ஐடிசி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால் ஐடிசி தரப்பு விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஐடிசி நிறுவன நீல நில பாக்கெட்டுகளுக்கு தடை விதித்துள்ளது.சிவப்பு நிற கவரில் முதலில் தொடங்கப்பட்ட மாம்ஸ் மேஜிக் பின்னாளில் நீல நிறத்துக்கு மாற்றப்பட்டதே பிரச்னைக்கு காரணமாகும்.