உச்சம் தொட்ட ஐடிசி நிறுவன பங்குகள்:
ஜூலை 5 ஆம் தேதி வர்த்தகத்தின்போது ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. ஐடிசி நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவு வணிகத்தை மட்டும் தனியாக மாற்றும் முயற்சியின்காரணமாக அந்த நிறுவன பங்குகள் உச்சம் தொட்டுள்ளன. காலை 11.30 மணி நிலவரப்படி தேசிய பங்குச்சந்தையில் ஐடிசி நிறுவன பங்கின் விலை 2%அதிகரித்து ஒரு பங்கு 478 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. 2023ஆம் ஆண்டில் மட்டும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 43 % லாபத்தை பதிவு செய்துள்ளது. ஹோட்டல் துறைக்கு திடீரென ஏற்பட்ட மவுசு காரணமாக ஐடிசி தனது ஹோட்டல்களை மட்டும் குழுமத்தில் இருந்து விலக்க முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பான தரவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாகவே ஐடிசி நிறுவன பங்குகள் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளன. ஐடிசியின் மொத்த வணிகத்தில் ஹோட்டல் துறையில் மட்டும் 5 %க்கும் குறைவான பங்களிப்பு மட்டுமே தரப்படுகிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு வரை 21.4% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை ஐடிசி நிறுவனம் அடைந்துள்ளது.
அதாவது நிகர லாபமானது 5 ஆயிரத்து 86 கோடி ரூபாயாக உள்ளது. சேவைகள் சார்ந்த பணிகளில் மட்டும் ஐடிசி நிறுவனத்தின் வருவாய் 16ஆயிரத்து398 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதில் ஹோட்டல்கள் துறை வருவாய் மட்டும் 781 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.