இனி தங்கத்த நினைச்சி பாக்க கூட முடியாது போல…
என்னங்க தங்கம் இம்புட்டு விலை விக்குதுன்னு புலம்பாதவர்களே இருக்க முடியாது என்ற சூழல் உலகின் காண முடிகிறது. அமெரிக்காவில் வங்கிகள் திவாலானதால் அமெரிக்கர்கள் தங்கள் முதலீடுகளை தங்கம் பக்கம் திருப்பினர். இதன் விலைவாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தங்கம் விலை அநியாயத்துக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருகிராம் தங்கம், வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகமிக உச்சமாக 20 ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை சனிக்கிழமை விலையை விட 20 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 74,600 ரூபாயாக இருக்கிறது.தங்கம் விலை மட்டுமே இவ்வளவு இருக்கும் நிலையில் ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், செய்கூலியும் சேதாரமும் சேர்த்தால் தங்கம் கிட்டத்தட்ட அரை லட்சமாக உயர்ந்துள்ளது. மார்ச் 20ம் தேதியே இத்தனை விலை ஏற்றம் என்றால் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயில் சென்றுதான் நிற்குமோ என்று சாதாரண பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே தங்கம் விலையை கட்டுப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகளை உலகளவில் நாடுகள் சேர்ந்து எடுக்க வேண்டும் என்பதே சாதாரண மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது