அது அவங்க வேல..நான் தலையிட ஒன்னும் இல்ல….
அதானி குழும பங்குகள் ஹிண்டன்பர்க் அறிக்கையால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலில், எந்தெந்த வங்கிகள் எவ்வளவு பணம் கடனாக அதானிக்கு தந்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கி அண்மையில் கேட்டது. இந்த சூழலில் நிலைமையை கண்காணிக்கும் பணியை செய்ய வேண்டியது ரிசர்வ் வங்கியின் பணி என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு முன்பே ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் வேலையை செய்துள்ளதாக கூறிய நிதியமைச்சர் எல்ஐசியும் எவ்வளவு பணம் அதானி குழுமத்தில் போடப்பட்டுள்ளது என தெளிவுபடுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். சந்தை எப்படி ஒழுங்காக செயல்பட வேண்டுமோ அதற்காக ரிசர்வ் வங்கி தனது பணியை சிறப்பாகவும் சுதந்திரமாகவும் செய்வதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதானி குழும FPO பின் வாங்கியது குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் பதில் கேள்விகளை முன்வைத்தார். எத்தனை முறை FPO திரும்பப் பெறப்பட்டுள்ளன,எத்தனை முறை வரவில்லை என்று உங்களுக்கு தெரியுமா என்றும் அவர் பதில் கேள்விகளை கேட்டுள்ளார்.