அது குப்பை – வங்கி குறித்து வெளியான தகவல்…
உலகளவில் வங்கிகள்,நிறுவனங்களை மதிப்பிடுவதில் தனித்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பது அமெரிக்காவின் மூடீஸ் என்ற நிறுவனம். நியூயார்க்கை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட சிக்னேச்சர் வங்கியை ஒன்றும் இல்லாத வங்கி என்ற பிரிவுக்கு குறைத்துள்ளது.இது மட்டுமின்றி 6 அமெரிக்க வங்கிகளின் தரமும் குறைத்து மூடிஸ் நிறுவனம் தரவரிசையை தயாரித்து வருகிறது. திவாலாகிவிட்ட வங்கியான சிக்னேச்சர் வங்கியை இனி தரவரிசைப்படுத்தப் போவதில்லை என்று மூடிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சிக்னேச்சர் வங்கி மட்டுமின்றி,பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி,ஜியான்ஸ் வங்கி கார்பரேஷன்,வெஸ்டர்ன் அலையன்ஸ் பேன்கார்ப், கோமேரிகா,UMBfinancial கார்ப் மற்றும் intrust financial corporation ஆகிய வங்கிகளின் வகையை தரம் குறைத்து மதிப்பிடவும் மூடிஸ் முடிவெடுத்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே 3-வது பெரிய தோல்வியில் முடிந்த வங்கி என்ற மோசமான சாதனையை பெற்ற சிக்னேச்சர் வங்கி,சிலிக்கான் வேலி திவாலான அடுத்த சில நாட்களிலேயே கட்டமைப்பு சரிவை கண்டுள்ளது.பல கோடி பேர் இந்த இரண்டு வங்கிகளிலும் கணக்கு வைத்திருந்த நிலையில் திடீரென திவாலானதால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் கணிசமான சரிவு காணப்பட்டது.