ஜாக்மா சொத்து சரிஞ்சி போச்சுமா..
உலகளவில் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் ஜாக்மாவும் ஒருவராக திகழ்கிறார். அலிபாபா நிறுவனங்களை கவனித்து வரும் ஜாக்மா,அண்மையில் ஆண்ட் என்ற குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்தார். இந்தநிறுவனம் பேமண்ட் வசதிகளை செய்து தருகிறது. 58 வயதாகும் ஜாக்மா, தனது சொத்தில் ஒரு பங்கை ஆண்ட் குழுமத்தில் செலவிட்டார். அதாவது 9.1விழுக்காடு பங்கை ஜாக்மா அந்த நிறுவனத்தில் வைத்துள்ளார். இந்த குழுமத்தின் தொடர் தோல்விகளால் ஜாக்மாவின் சொத்துமதிப்பில் ,குறிப்பாக ஆண்ட் நிறுவனத்தில் இவரின் வருவாய் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது.
2020 முதல் 2022 வரை ஆன்ட் குழுமத்தின் பங்குகள் கணிசமாக சரிந்தன. இதனால் செய்வது அறியாது தவித்த ஜாக்மா,அண்மையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப வாங்குவது என்று முடிவெடுத்தார். ஆனால் அது இன்னும் பாதகமாகவே அமைந்தது. இந்த நிலையில் ஆண்ட் நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் பங்குச்சந்தைகளில் வெளியிடுவதற்கான முயற்சிகளை ஜாக்மா செய்துவருகிறார். எத்தனை பெரிய சறுக்கல்கள் வந்தாலும் இன்னமும் ஜாக்மா சீன பணக்காரர்கள் பட்டியலில் டாப் 5 இடங்களில் ஒருவராக இருக்கிறார் என்கிறது புளூம்பர்க் நிறுவனம்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் ஆண்ட் குழுமத்தின் சொத்துமதிப்பு மட்டும் 56விழுக்காடு சரிந்துள்ளது. ஜாக்மா நிறுவனத்தின் இந்த செயல்பாடுகள் முதலீட்டாளர்களின் கவனத்தை திசைத் திருப்பியுள்ளனர்.