“சிங்கிள்ஸ் டே” விற்பனை ஜோர், அலிபாபா அள்ளிய 85 பில்லியன் டாலர்கள் !
சீனாவின் புகழ்பெற்ற நிறுவனமான அலிபாபா தனது “சிங்கிள்ஸ் டே” விற்பனை மூலம் சுமார் 85 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்துள்ளது. அலிபாபா தனது விற்பனை பெருக்குவதற்காக 2009ஆம் ஆண்டு முதல் “சிங்கிள்ஸ் டே” விற்பனையை தொடங்கியது. முதல் வருடத்திலேயே விற்பனை அமோகம். கடந்த ஆண்டு இதனை 11 நாள் விற்பனை ஆக மாற்றியது 11 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனையில் அலிபாபா நிறுவனம் 84.54 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை செய்திருக்கிறது. 11 நாளில் 84.68 என்றால் இந்திய மதிப்பில் ஒரு நாளைக்கு 5,71,929 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அலிபாபாவின் “சிங்கிள்ஸ் டே” வர்த்தகத்தில் இது ஒரு வரலாற்று சரிவு என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். சீனாவில் நுகர்வோர் குறைவு காரணத்தினாலும், அலிபாபா பெரிய அளவில் விளம்பரம் செய்யாத காரணத்தினாலும் இந்த குறைவான வளர்ச்சி குறித்து அலிபாபா எதிர்பார்த்தே இருந்தது.
சீனாவில் மின்சார தட்டுப்பாடு, கோவிட் ஊரடங்கு என பல பிரச்சனைகள் இருந்தாலும் மறுபக்கம் சில்லரை விற்பனை, உற்பத்தி விலை அதிகரித்ததோடு விநியோக பிரச்சினைகள் காரணமாகவும் விற்பனை சரிந்துள்ளது. இவ்வளவு பிரச்சினைக்கு நடுவிலும் இந்த ஆண்டு 84.54 பில்லியன் வர்த்தகத்தை பெற்றது. சீன அரசின் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அலிபாபா நிறுவனம், இந்த “சிங்கிள் டே” விற்பனை மூலமாக சந்தையில் மீண்டு வந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.