ராணிப்பேட்டையில் தயாராக இருக்கும் ஜாகுவார் கார்கள்..
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை டாடா மோட்டர்ஸ் தமிழ்நாட்டில் செய்து கார் உற்பத்தி ஆலையை தொடங்க இருப்பதாக அறிவித்தது. அதுவும் இந்த ஆலை ராணிப்பேட்டையில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்தனர்.
இந்த சூழலில் 9 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவன ஆலையில் எந்த வகை கார்கள் தயாரிக்கப்படும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது டாடா மோட்டார்ஸின் கிளை நிறுவனமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் காரில் எந்த வகையை உருவாக்கப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை எனினும் விரைவில் ஆலை கட்டும் பணிகள் தீவிரமடையும் என்று அந்நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டர்ஸ் நிறுவனம் வாங்கி பல நகரங்களில் உற்பத்தியை செய்து வந்தது. 9ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட இருக்கும் ஆலை 24 மாதங்களுக்கும் உற்பத்தியை தொடங்கி விடும் என்றும், நேரடியாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த ஆலையில் பெண் பணியாளர்கள் அதிகம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.