சரியாக முதலீடு செய்யும் ஜாம்பவானின் நிறுவனம்..
சேமிப்புக்கு பெயர் பெற்ற நபரான வாரன் பஃபெட்டின் நிறுவனமான பெர்க்ஷர் ஹாத்வே நிறுவனம் 4வது காலாண்டில் மிகச்சிறப்பான முதலீடுகளை செய்துள்ளது. தைவான் சிப் தயாரிப்பு நிறுவனமான Tsmcயில் இருந்து பங்குகளை விலக்கிக்கொண்ட பெர்க்ஷர் நிறுவனம் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தில் முதிலீடுகளை மாற்றியுள்ளார். tsmcயில் இருந்து 86.2% பங்குகளை எடுத்துக்கொண்ட வாரனின் நிறுவனம், 68.5 டாலருக்கு வாங்கிய பங்குகளை 74.5 டாலருக்கு விற்றுள்ளது. சிப் தயாரிப்பில் பெரிய லாபம் இல்லை என்று கருதிய வாரனின் நிறுவனம் தனது முதலீடுகளை ஆப்பிள் நிறுவனத்தின் பக்கம் மடைமாற்றியுள்ளது. 20.8மில்லியன் ஆப்பிள் நிறுவன பங்குகளை வாரனின் நிறுவனம் வாங்கியுள்ளது.ஆப்பிளின் பங்குகள் 18%இந்தாண்டு மட்டும் உயர்ந்துள்ளது. 84 மில்லியன் அமெரிக்க டாலர் பங்குகளை லூசியானா பசிபிக் நிறுவனத்தில் இணைத்துள்ளது.