ஜாவா – மோட்டார் சைக்கிள்கள் சிக்கித் தவிப்பு
ஜாவா, யெஸ்தி மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், அமெரிக்க சுங்கத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சுமார் 5,000 மோட்டார் சைக்கிள்கள், சுங்க வரி நிலவரங்கள் குறித்த நிலையிலும், உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இணை நிறுவனர் அனுபம் தரேஜா கூறுகையில், அமெரிக்க சந்தை இந்நிறுவனத்தின் முக்கிய ஏற்றுமதி இலக்காக இருந்த நிலையில், சுங்க அனுமதி தாமதம் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்காவில் 3,000–5,000 யூனிட் விற்பனை இலக்காக இருந்தது. அவர், சுங்கவரி 0–10% வரம்பில் இருக்கும் என நம்புகிறார்.
ஒரே பகுதியின் மீது சார்ந்திருப்பதை குறைப்பதற்காக தென் அமெரிக்கா, மேற்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளை முக்கிய இலக்குகளாகக் கொண்டு நிறுவனம் தனது வெளிநாட்டு இருப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்றுமதி, மொத்த விற்பனையின் சுமார் 20% பங்கைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சுங்கவரி உயர்வு, பிற இடங்களில் கடுமையான விதிமுறைகள் போன்ற சவால்களை சந்தைத் தேவைக்கேற்ப தயாரிப்புகளை மாற்றியமைத்து, பாரம்பரிய பிராண்டு மெருகைப் பயன்படுத்தி நிறுவனம் சமாளிக்க திட்டமிட்டுள்ளது.
அனுமதி பிரச்சினைகள் தீர்ந்தவுடன் அனுப்புவது அதிகரிக்கப்படும். நிறுவனம் ஜப்பான், நியூசிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருப்பைக் கொண்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் பங்கை உயர்த்தும் நோக்கில், நிறுவனம் ₹2.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் புதிய யெஸ்தி ரோட்ஸ்டர் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்று பிராண்டுகளில் மொத்தம் 12வது தயாரிப்பாகும் இது. நடுத்தர விலையில் இன்னொரு மாடலை இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. 2024-25-இல் நிறுவனம் 32,343 யூனிட்கள் விற்று, 0.17% சந்தைப் பங்கை பெற்றது.
விரிவாக்கத்துக்கு ஆதரவாக, விழாக்காலத்திற்கு முன் 350 டீலர்ஷிப் மையங்களை உருவாக்கி, விற்பனை, சேவை, உதிரி பாகங்கள் அனைத்தையும் வழங்கும் 3S தரநிலைக்கு ஏற்ப வாடிக்கையாளர் அனுபவம், டீலர் வலிமையை மேம்படுத்த நிறுவனம் செயல்படுகிறது.
