Jet Airways புதுப்பிப்பு காலக்கெடு.. – மார்ச் 29 வரை நீட்டிப்பு..!!
ஜெட் ஏர்வேஸ் புத்துயிர் திட்ட காலக்கெடுவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) மார்ச் 29 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக அது வழங்கிய காலக்கெடு மார்ச் 22-ம் தேதி முடிவடைந்தது.
கடந்த ஜூன் மாதம் NCLT ஜெட் ஏர்வேஸை புதுப்பிக்கும் கல்ராக் = ஜலான் கூட்டமைப்புக்கு திட்டத்தை அனுமதித்தது. இந்த திட்டத்தின்படி, அமலாக்கத்துக்கு தேவையான நிபந்தனைகளை நிறைவேற்ற கூட்டமைப்புக்கு 270 நாட்கள் இருந்தன.
கூட்டமைப்பு விண்ணப்பம் தொடர்பாக கடன் தருபவர்கள் ஆராய அனுமதிக்கும் வகையில் அதற்கான காலக்கெடு ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணை மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தனது விமான சேவையை நிறுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலான் மற்றும் யுகே-வைச் சேர்ந்த கால்ராக் கேபிட்டல் ஆகியோரைக் கொண்ட ஜலான்-கல்ராக் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமான நிறுவனத்தை புதுப்பித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சீவ் கபூர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.