களம் கண்டது ஜியோ பினான்சியல் சர்வீசஸ்..
இந்திய நிதித்துறையில் ஜியோ நிறுவனம் மிகமுக்கியமானதாக இருக்கும் என்று கே.வி.காமத் தெரிவித்துள்ளார்.ரிலையன்ஸில் இயங்கி வந்த நிதிப்பிரிவு அண்மையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பங்குகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்குச்சந்தை அதிகாரிகள், ரிலையன்சின் நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர் ஒரு பங்கின் விலை 262 ரூபாயாகவும், 265 ரூபாயாகவும் இந்திய சந்தைகளில் இருவேறு விதமாக விற்கப்பட்டது. ஜியோ பினான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அடுத்த 10 வணிக நாட்களுக்கு சந்தையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகளை வாங்கத்தான் முடியும்,இன்ட்ராடே போல விற்க முடியாது.நிதித்துறையை வலுவாக்கும் முயற்சியாக இந்த தனிப்பிரிவை முகஷே் அம்பானியின் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அடுத்த 8முதல் 9 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகும் என்றும் நிறுவனங்கள் கணித்துள்ளன.நிதித்துறையில் போதிய தன்னிரைவு வேண்டும் என்பதே இந்த பங்குகள் அறிமுகப்படுத்த முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. 2031ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 பில்லயன் பொருளாதாரமாக மாறும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வங்கியில்லாத நிதி நிறுவனமாக செயல்பட இருக்கிறது. வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்ட முதலநாளில் 262 புள்ளிகளாக வணிகத்தை உயர்த்திய நிலையில் மாலைக்குள்ளே 261 ரூபாயில் வணிகமானது.
மற்ற நிறுவனங்கள் பங்குகளை போல அல்லாமல் டெலிவரி வகையில்தான் வாடிக்கையாளர்களுக்கு இந்த பங்குகள் கிடைக்கும்,இந்த நிகழ்ச்சியில் பேசிய காமத்,இந்தியாவின் நிதிகள் வரல் நுனியில் வைத்திருப்பது பாராட்டுக்ளுக்கு உரியது என்றும் காமத் குறிப்பிட்டார்.இந்தியாவில் 5 பில்லியன் பொருளாதாரம் 2031-ல் சாத்தியப்படும் என்றும் காமத் தெரிவித்துள்ளார்.