லேசான தீர்வு..
அண்மையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியிருந்தன. இதனால் மக்கள் அவதியடைந்தனர். இதிலும் குறிப்பாக ஜியோ நிறுவன கட்டணம் அதிகமாக இருந்ததாக மக்கள் கவலை தெரிவித்தினர்.
இந்த நிலையில் இந்த பிரச்சனை ஜியோ நிர்வாகம் வரை சென்றிருக்கிறது.இதனால் சத்தமில்லாமல் 3 புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஆட் ஆன் என்ற வசதியை தேர்வு செய்துகொள்ள இயலும்ஆனால் அதற்கு அந்த டிவைசில் 5ஜி வசதி இருக்க வேண்டும். 151 ரூபாய் பிளானில் 9ஜிபி வரை உயர் வேகத்தில் இண்டெர்நெட் இருக்கும், அதே நேரம் 5ஜி சேவையை அளவில்லாமல் பெறலாம். 101 ரூபாய் பிளானில் மேலே சொன்ன அதே அளவு தான் ஆனால் இணைய வசதி மட்டும் 6ஜிபி மட்டுமே கிடைக்கும் 4ஜியில், 5ஜியில் அளவில்லாத இணைய சேவை கிடைக்கும். இதுவும் செய்ய முடியாது என்பவர்களுக்காகவே 51 ரூபாய் ஆட் ஆன் வசதியையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 3ஜிபி 4ஜி வேகமும், 5ஜி சேவை அதிவேகத்திலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தும் பிரீப்பெயிடு வாடிக்கையாளர்களும் இனி 5ஜிக்கு தகுதியானவர்கள்.1.5 ஜிபி டேட்டா உள்ளவர்கள் இதனை பயன்படுத்த இயலாது. சுமார் 25 விழுக்காடு வரை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். விலை உயர்த்தப்பட்டதால் ஜியோவை புறக்கணிப்போம் என்றும் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். ஜியோ விலையேறியதால் மக்கள் பிஎஸ் என்எல் பக்கம் திரும்பி வருகின்றனர்.