நோக்கியாவுடன் டீல் பேசிய ஜியோ..
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் தனது சேவையைமேம்படுத்தும் வகையில் புதிய உபகரணங்களை நோக்கியா நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கான உபகரணங்கள் கடனாக பெற ஜியோ நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எச்எஸ்பிசி,சிட்டி குரூப் வங்கிகள், இந்த கடன் தொடர்பாக பேசியுள்ளனர். 15 ஆண்டுகள் அளவுக்கு இந்த கடன் தொகை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜியோ நிறுவனத்துக்காக பின்லாந்தைச் சேர்ந்த Finnvera நிறுவனம் ஜாமின் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் 5ஜி சேவையை முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் ஜியோதான். கடந்தாண்டே அதற்கான உபகரணங்களை அக்டோபர் மாதத்தில் நோக்கியாவிடம் இருந்து ஜியோ வாங்கியிருந்தது. செல்போன் சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பில் இரண்டு பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் இணைந்திருப்பதால் தற்போது ஜியோ சேவை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஜியோவுக்கும்-நோக்கியாவுக்குமான டீல் என்பது பெரிய தொகை கைமாறும் என்பதால் இது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. நமக்கு கிடைத்த தகவலை நாம் செய்தியாக வெளியிடுகிறோம்..