ஏர்டெல் அளவுக்கு ஜியோ இல்லையாமே..
இந்தியாவில் முதல் முதலில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான், இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அண்மையில் எதிர்பார்த்த அளவுக்கு வேகம் இல்லை என்று புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபன் சிக்னல் என்ற நிறுவனம் இது பற்றி இந்தியாவில் ஆராய்ச்சி நடத்தியுள்ளது. 2023 முதல் காலாண்டில் 304 எம்பிபிஎஸ் ஆக இருந்த பதிவிறக்க வேகம், கடந்தாண்டின் கடைசி காலாண்டில் 280.7 மெகாபைட்ஸ் பர் செகண்ட் என்ற அளவுக்கு சராசரியாகவே வேகம் குறைந்திருப்பதை அந்த ஆய்வு உறுதி செய்திருக்கிறது. இந்தியாவில் 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 18 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 10கோடியே 80 லட்சம் பேர் ஜியோ வாடிக்கையாளர்கள், மீதமுள்ள 7 கோடியே 20 லட்சம் பேர் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். 2025 கடைசி காலாண்டிற்குள் இந்தியாவில் 5ஜி சேவை 26 கோடியாக அதிகரிக்கும் என்றும்,22 விழுக்காடு வரை வளரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏர்டெலும், ஜியோவும், 4ஜி சேவைக்கு எவ்வளவு கட்டணமோ அதே கட்டணத்தில்தான் 5ஜி சேவையை அளித்து வருகின்றன. இதற்காக இரு நிறுவனங்களும் அதிக செலவை முதலீடு செய்ய இருக்கின்றன. இந்தியாவில் 5ஜி பேஸ் ஸ்டேஷனின் எண்ணிக்கை கடந்த மே மாதம் 4.46லட்சமாக உயர்ந்திருக்கிறது. அதாவது ஒரு லட்சம்பேருக்கு 31 5ஜி சேவைகள் அளிக்கும் டவர்கள் உள்ளன. தென்கொரியாவில் 1லட்சம் பேருக்கு 593 டவர்களும், ஐரோப்பிய யூனியனில் 1லட்சம் பேருக்கு 103 டவர்களும் உள்ளன. ஏர்டெலின் டவுன்லோடு ஸ்பீடு கடந்தாண்டின் முதல் காலாண்டில் 260.4 எம்பிபிஎஸ்ஆக இருந்தது.இதே அளவு நடப்பாண்டின் முதல் காலாண்டில் சராசரியாக 273.6 எம்பிபிஎஸ்ஆக இருக்கிறது. ஆனால் ஜியோவின் 5ஜி டவுன்லோடு வேகம் கடந்தாண்டின் முதல் காலாண்டில்,சராசரியாக 323.6எம்பிபிஎஸ்ஆக இருந்தது. இது நடப்பாண்டின் முதல் காலாண்டில் சராசரியாக 261.8எம்பிபிஎஸ்ஆக இருக்கிறது . இந்தியாவில் 700 மெகா ஹர்ட்ஸ் என்ற குறைந்த திறன் கொண்ட அலைக்கற்றையை வைத்திருக்கும் ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே.