செப்.7 உடன் கிளம்பும் ஜியோ..
ரிலையன்ஸ் குழுமத்தில் இடம்பிடித்திருந்த நிதி நிறுவனம் பின்னர் ஜியோ பைனாந்சியல் சர்வீசஸ் என்று அண்மையில் மாறியது.இந்த நிறுவனம் தனது பங்குகளை சிறப்பு வெளியீடாக வெளியிட்டு நிதியை திரட்டியுள்ளது.இந்த நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு நிஃப்டி 50 உள்ளிட்ட எந்த பங்குச்சந்தைகளிலும் ஜியோவின் பங்குகள் இடம்பிடிக்காது என்று அறிவிக்கப்பட்டது.நிஃப்டி 50,நிஃப்டி 100,நிப்டி 200,500,நிஃப்டி எனர்ஜி உள்ளிட்ட எந்த பங்குச்சந்தைகளிலும் இந்த பங்கு இடம்பிடிக்காது. ஏற்கனவே மும்பை பங்குச்சந்தையில் இருந்தும் ஜியோ பினான்சியல் சர்வீசஸ் நிறுவனம் நீக்கப்பட்டுவிட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி,ஒரு பங்கின் விலை தேசிய பங்குச்சந்தையில் 0.73%உயர்ந்து 255 ரூபாய் 36 காசுகளுக்கு விற்பனையானது.105 மில்லியன் பங்குகளை விற்று 324 மி்ல்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகளை பெறவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. அறிவிக்கப்பட்ட சந்தைவிலையைவிட சற்று குறைவாகவே ஜியோ பினான்சியல் சர்வீசஸ் பங்குச்சந்தையில் விலை போவதாக முதலீட்டாளர்கள் கலக்கம் தெரிவிக்கின்றனர்.