ஜியோவின் முரட்டு டீல்..
ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து அண்மையில் பிரிக்கப்பட்ட ஜியோ பினான்சியல் சர்வீசஸ் நிறுவனம்,பிரபல பிளாக் ராக் என்ற நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. ஜியோ பிளாக்ராக் நிறுவனம் 50:50 பங்களிப்பை கொண்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பிளாக் ராக் என்ற நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது. தற்போது ரிலையன்ஸ் ஜியோவுடன் கைகோர்த்துள்ளதால் மீண்டும் இந்திய சந்தைகளில் பிளாக் ராக் நிறுவனம் வலம் வருகிறது. பிளாக் ராக் நிறுவனம் முதலீட்டு நிர்வாகத்திலும், ரிஸ்க் மேனேஜ் செய்வதிலும் சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.ஜியோ நிறுவனம் சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை கொண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த பிளாக் ராக் நிறுவனமும்,ஜியோவும் இணைந்துள்ள கூட்டு நிறுவனம்,இந்தியாவுக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது முதல்கட்டமாக 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரு நிறுவனங்களும் இணைந்து தங்கள் பங்குகளாக முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மிகமுக்கியமான வாய்ப்பாக இந்த இணைப்பை பார்ப்பதாக பிளாக்ராக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்ததும் ஜியோ பினான்சியல் சேவை-பிளாக்ராக் நிறுவனம் தனது சேவையை தொடங்க இருக்கிறது.