இந்த மாத வரி வசூல் எவ்வளவு?
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 5வது முறையாக ஒரு லட்சத்து 40 அயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை வசூலான ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாவது அதிகபட்ச தொகையாக, ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் வசூலானதை காட்டிலும், 28 சதவிகிதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக 25 ஆயிரத்து 751 கோடி ரூபாயும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ஆக 32 ஆயிரத்து 807 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக 79 ஆயிரத்து 518 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி-யாக 8 ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவது, ஜிஎஸ்டி கவுன்சில் சரியான முடிவுகளை எடுத்து வருவதை காட்டுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.