இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க..
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, கடன்கள் மீதான வட்டியை கடந்தாண்டில் மட்டும் 10 முறை அந்நாட்டு பெடரல் ரிசர்வ் உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அண்மையில் வெளியான புள்ளிவிவரங்களில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலும் வரும் கோடை காலத்தில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பிரபலஅமெரிக்க தொழிலதிபர் டேவிட் ரபுன்ஸ்டைன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அது பாதகத்தை ஏற்படுத்தும் என்றும்,அந்த தவறை மட்டும் செய்துவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.விலைவாசி உயர்வுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டதாக அவசரப்பட்டு கொண்டாடவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அந்த நாட்டில் சம்பளம் உயர்ந்துள்ளது,ஆனால் உணவு மற்றும் ஆற்றல்துறை பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. 2 விழுக்காடு எப்போது வருகிறதோ அப்போதுதான் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக அர்த்தம் என்று கூறியுள்ள டேவிட்,4விழுக்காடு வந்த உடனே வெற்றி பெற்றுவிட்டதாக கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்தடுத்த வங்கிகள் திவாலானதால் அந்த நாட்டு பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள டேவிட், தற்போது நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளார்.