நீதிடா..நேர்மைடா..நியாயம்டா…நேர்மைக்காக உரிமை குரல் எழுப்பும் பிரபலம்..
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ள நாராயணமூர்த்தி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அப்போது பேசிய அவர்,இந்தியாவுக்கு நேர்மை என்ற கலாச்சாரம்தான் தேவைப்படுகிறது. என்றார். ஒரு இடத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு வேறொரு நிறுவனத்துக்கும் வேலை செய்யும் மூன்லைட்டிங்கை கடுமையாக எதிர்த்துள்ள நாராயண மூர்த்தி,இந்தியா வளர நேர்மை அவசியம் என்றார். விரைவான முடிவெடுக்கும் திறன் இந்தியர்களுக்கு வேண்டும் என்று கூறிய அவர், இந்தியாவில் குறைவான அளவிலேயே மக்கள் மிகக்கடுமையாக உழைப்பதாக கூறினார். ஆனால் பிரதமர் மோடியின் கனவுகளை நிறைவேற்ற இன்னும் பலரின் உழைப்பு தேவை என்றும் நாராயண மூர்த்தி கேட்டுக்கொண்டார். இளைஞர்கள் சோம்பேறிகளாக இருக்கக்கூடாது என்று வகுப்பெடுத்த அவர், மூன்லைட்டிங் என்ற குழியில் விழுந்துவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.1940களில் இந்தியாவும் சீனாவும் ஒரே நிலையில் இருந்ததாக கூறிய அவர், தற்போது சீனா நம்மைவிட 6 மடங்கு வளர்ந்துள்ளதாக புகழ்ந்தார். இந்தியாவில் அடிப்படையில் ஊழல் அதிகம் உள்ளதாக கூறிய அவர்,சீனாவில் அது இல்லை என்றார். இந்தியாவிற்குள்ளேயே ஒரு தொழிலதிபர் வியாபாரம் செய்து தங்க வேண்டும் என்றால் விரைவான முடிவெடுத்து அதனை செயல்படுத்தும் ஆற்றல் வேண்டும் என்றும், தேவையில்லாத தொல்லைகள் அளிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.