Shriram General Insurance.. 9.99% பங்குகளை வாங்கும் KKR..!!
ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் (SGI)-ன் 9.99 சதவீத பங்குகளை KKR நிறுவனம் வாங்க உள்ளது.
ஸ்ரீராம் குழுமத்தின் நிதிச் சேவை வணிகத்திற்கான ஹோல்டிங் நிறுவனமான ஸ்ரீராம் கேப்பிட்டல் மற்றும் பான்-ஆப்பிரிக்க நிதிச் சேவைக் குழுவான சன்லாம் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5,000 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறியது.
தொழில்துறை ஆதாரங்களின்படி, SGI-யின் மதிப்பு ரூ.18,000 கோடி என்றும், சுமார் 77 சதவீதத்தை வைத்திருக்கும் ஸ்ரீராம் கேபிட்டலின் பங்குகளை கேகேஆர் வாங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வயதுடைய SGI, தொழில்துறையின் பரிந்துரைக்கப்பட்ட விகிதமான 1.5க்கு எதிராக 4-க்கு மேல் ஈர்க்கக்கூடிய கடனளிப்பு மார்ஜின் விகிதத்தைக் கொண்டிருப்பதால், அதற்கு இப்போது மூலதனம் தேவையில்லை என்று கூறியது.
ஸ்ரீராம் ஜெனரலிடம் சுமார் 43 லட்சம் பாலிசிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதில், கிட்டத்தட்ட 95-96 சதவீதம் டிஜிட்டல் மீடியத்தில் வெளியிடப்பட்டது. “உத்தேச ‘ஸ்ரீராம் ஒன் செயலி அடுத்த 13-14 மாதங்களில் நேரலைக்கு வரும், இது ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்கும். குழு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மற்ற அனைத்து நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் விற்க முடியும் ” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.