இன்றே உங்கள் கார் அல்லது டூவீலர் இன்சூரன்ஸ் குறித்து அறிந்து கொள்ளுங்கள் !
மோட்டார் இன்சூரன்ஸ் செய்யும்போது மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் என்பது கட்டாயம் என்பதால், பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனமாக உங்களை அவர்களுக்கு லாபம் தரக்கூடிய, உங்களின் இழப்புகளை சரியாக ஈடு செய்ய முடியாத பிரீமியம் குறைவாக இருக்கும் கவர்ச்சிகரமான இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்க வைத்து ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் தற்போது வைத்திருக்கும் வாகனத்துக்கான இன்சூரன்ஸ் சரியானதுதானா? உங்கள் வாகனத்தின் மீதான இன்சூரன்ஸில் IDV மதிப்பு சரியாக இருக்கிறதா? ஒரு வேளை உங்கள் டூ வீலரோ, காரோ விபத்தை சந்திக்க நேர்ந்தால் முழுமையான இழப்பீட்டுத் தொகை உங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
எனக்குத் தெரிந்த 32 வயதான தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் புத்தம் புதிய கார் ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார், 10 லட்சம் மதிப்பிலான கார், கார் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அவருக்கான மூன்றாம் தரப்பு இன்சூரன்சுடன் கூடிய பாலிசி ஒன்று பரிந்துரை செய்யப்பட்டு அவர் தலையில் கட்டப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட ஒரு விபத்தில் அவருடைய கார் கடுமையான சேதமடைந்தது, ஆனால், அவருடைய இழப்பீட்டு கோரிக்கையின் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குவதாகச் சொன்ன பணமதிப்பு அதிர்ச்சி தருவதாக இருந்தது, 50 % கூட இழப்புகளை ஈடுகட்டுமளவுக்கு அந்த இழப்பீட்டுத் தொகை இல்லை. கேட்டால் உங்கள் காரின் IDV மதிப்பு குறைவாகத்தான் இருக்கிறது என்கிறார்கள்.
அது என்ன IDV மதிப்பு?
IDV மதிப்பு என்பது உங்கள் வாகனம் பெரிய அளவில் சேதமடைந்தால் அல்லது திருடப்பட்டால் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்தும் அதிகபட்ச இழப்பீட்டைக் குறிக்கிறது. விபத்து நிகழ்ந்த பிறகு செய்யப்படும் அப்போதைய வாகன மதிப்பீடு பல்வேறு வகைகளில் குறைக்கப்படும், மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ்களோடு இணைத்து வழங்கப்படும் பல பாலிசிகள் உங்கள் பிரீமியம் தொகையை குறைப்பதற்காக சமரசம் செய்து கொள்கின்றன, கடைசியில் விபத்துகளின் போது சரியான இழப்பீடு கிடைக்காமல் நீங்கள் பாதிப்படைவீர்கள்.
ஒருவேளை நீங்கள் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் தவிர தனியாக ஒரு பாலிசி வைத்திருந்தாலும் கூட அதில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும், மேலோட்டமாக சேதாரங்களுக்கு வழங்கப்படும் பாலிசியால் முழுமையான சேதங்களுக்கான மதிப்பை இழப்பீடாக வழங்க முடியாது, முதலாவது பம்பர் டு பம்பர் கவர் செய்யக்கூடிய பாலிசியாக இருக்க வேண்டும், இன்ஜின் சேதங்களை ஈடு செய்யும் இன்ஜின் ப்ரொடெக்சனை உள்ளடக்கியதாக பாலிசி இருக்க வேண்டும், நோ க்ளெய்ம் போனஸ் தரக்கூடிய பாலிசியாக இருக்க வேண்டும், இவற்றை எல்லாம் உள்ளடக்கிய பாலிசிகளை பெரும்பாலான நிறுவனங்கள் பிரீமியம் தொகை அதிகமாக இருக்கும் என்பதால் பாலிசிதாரர்களுக்கு பரிந்துரைப்பதில்லை.
மோட்டார் ஆக்சிடென்ட் கிளெய்ம் ட்ரிபியூனல் (MACT) எனப்படும் சாலை விபத்துக்களுக்கான இழப்பீடு வழங்கும் ஆணையங்களில் பெருங்கூட்டமாக மக்கள் திரண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சரியான இன்சூரன்ஸ் பாலிசிகள் இல்லாத காரணத்தால் மறுக்கப்படும் கோரிக்கைகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு மல்லுக்கட்டும் பாலிசிதாரர்கள் என்று தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் வாகன உரிமையாளர்களின் கூட்டம் தான் அது. எல்லாம் சரியாக இருக்கும் வரை இன்சூரன்ஸ் குறித்த எந்த அக்கறையும் நமக்கு இருப்பதில்லை, ஆனால், ஒரு விபத்திலோ, திருட்டிலோ நாம் வாகனத்தை இழந்தாலோ, சேதமடைந்தாலோ தான் நமது இன்சூரன்ஸ் குறித்த விவரங்களை அவசர அவசரமாக நாம் அறிய முற்படுகிறோம்.
உங்கள் கார் அல்லது டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி என்ன மாதிரியானது? முழுமையாக உங்களுக்கு இழப்பீடு வழங்குமா? உங்கள் வாகனத்தின் IDV மதிப்பு என்ன? அறிந்து கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட எண்ணில் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் வாகனத்தின் விவரங்களோடு பாலிசி எண்ணைக் குறிப்பிட்டு எங்களுக்கு 9150059377 WhatsApp செய்யுங்கள்.
நர்மதா – 9150059377