சத்தமில்லாமல் சாதிக்கும் KPIT டெக்னாலஜீஸ் நிறுவனம்! முதலீடு செய்தவர்களுக்கு டபுள் டமாக்கா!
KPIT டெக்னாலஜீஸ், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை வழங்கும் ஒரு நிறுவனம். தன்னோட முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் கொடுத்திருக்கிறது. நிறுவனத்தின் பங்கு நிஃப்ட்டி – 50 பிரிவில் 16 சதவிகிதமும், S&P BSE -500 இன்டெக்சில் 20 சதவிகிதமும் லாபமீட்டி இருக்கிறது. பங்குச் சந்தை மூலதனத்தில் ₹8,400 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அதன் 52 வார அதிக பட்ச விலையான 315.90 ரூபாயில் பரிவர்த்தனையானது. இடையில் ஒரு சருக்கலாக 280.80 ரூபாய்க்குக் குறைந்தாலும் பிறகு உயரத் துவங்கியது.
சிறிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் இருந்த போதும், தொழில்நுட்பரீதியில், இந்தப் பங்கு ஏற்ற நிலையில் தான் இருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் இது 5, 10, 20, 50 மற்றும் 200 நாட்கள் வரையில் கணக்கிடப்படும் சராசரி மதிப்பீட்டில், முக்கியமான குறுகிய மற்றும் நீண்ட கால செயல்பாட்டுப் பங்குகளின் சராசரி விலையை விட நன்றாகவே வணிகமாகிறது. அதிகப்படியாக விற்பனையாகும் இந்த நிறுவனப் பங்குகள் இதன் வளர்ச்சியில் பங்காற்றுகிறது. மேலும் அடுத்த 52 வார உயர்வுகளில் 380 ரூபாய் வரையில் இந்த MIDCAP தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நிபுணர்கள் கணிக்கிறார்கள். அதாவது ஆகஸ்ட் 4 அன்று, இதன் விலையான 305 ரூபாயில் இருந்து 24 சதவிகித நிலையான உயர்வு நிகழுமேயானால் 380 ரூபாயை விரைவில் எட்டும்.
இந்த நிறுவனம் வழக்கமான ஆட்டோமொபைல் துறையில் மின்சாரம் சார்ந்த இயக்கம். தானியங்கி தொழில்நுட்பம், இணைப்பு முறை மற்றும் பகுப்பாய்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இயங்கும் முன்னணி நிறுவனங்களின் பொறியியல் சார்ந்த தானியங்கு தயாரிப்புகளில் சுற்றுச் சூழல் மாற்றம் சார்ந்த விஷயங்களில் இணைந்து செயல்படுகிறது என்று நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக, இந்த நிறுவனத்தின் பங்கு, பங்குச் சந்தைப் பட்டியல் குறியீட்டில் அதிக உயர்வு மற்றும் அதிக வீழ்ச்சியைக் கொண்ட ஆனால் நீண்டகால வரிசையில் ஏறுமுகத்தில் உள்ளது.
“பங்குகளின் சரிவானது, அந்தப் பங்குக்கான ஆதரவு மற்றும் அதிக ட்ரெண்டிங் எடுக்க 21 நாட்களில் வாங்கும் அதிவேக சராசரி இவற்றைப் பொறுத்து நிகழ்கிறது. பங்குகளை வாங்குபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் விலை ஏற்றத்தை முடிவு செய்கிறது,” என்று சேங்டம் வெல்த் மேனேஜ்மென்ட்டின் ஆய்வு இயக்குனர் ஆஷிஷ் சதுர்மோஹ்தா கூறினார்.
இத்தகைய பங்குகளை விலை குறையும் போது கூட வாங்கலாம், என்றும், 300 ரூபாய் அளவில் இருந்தாலும், இவற்றின் விலை 280 ரூபாய்க்குக் கீழே செல்வதற்கான வாய்ப்பில்லை என்றும், 6 முதல் 9மாதங்களில் உச்ச அளவான 380 ரூபாயை அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார். KPIT நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் கடந்த நிதி ஆண்டை விட 149 சதவிகிதம் அதிகம். ஜூன் 30 இல் முடிவடைந்த காலாண்டில் இதன் மதிப்பு 60.24 கோடி. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 18.3 சதவிகித வளர்ச்சியுடன் 77.2 மில்லியன் டாலர்கள். நிதியாண்டு 22 க்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்களின் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான பல்வேறு செயல்திட்டங்களை KPIT டெக்னாலஜீஸ் முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கிறார் ஆஷிஷ் சதுர்மோஹ்தா.
பரபரப்பாகவும், அதீத மதிப்பீட்டு உயர்வோடும் செயல்படும் பங்குச் சந்தைகளில். சத்தமில்லாமல் அமைதியாக சாதிக்கும் KPIT மாதிரியான நிறுவனங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று உறுதியாகச் சொல்லலாம்.
Credits – Money Control