இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்கும் லேப்டாப் நிறுவனங்கள்..
இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளித்து வருகிறது. இந்த திட்டத்துக்கு உள்நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் சூழலில் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க பல வெளிநாட்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளன. குறிப்பாக 32 நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன. வெளிநாட்டு லேப்டாப்கள் உற்பத்திக்கு அண்மையில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் இந்த புதிய முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தாங்களாகவோ,இல்லை இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனங்களுடன் இணைந்தோ இந்த உற்பத்தியை தொடங்க இருக்கின்றனர்.மொத்தம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.HP, dell,Acer, lenovo ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுபோன்ற கணினி சார்ந்த வன்பொருட்கள் உற்பத்திக்கும் 24.3 பில்லியன் அளவுக்கு ஊக்கத்தொகையை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.