ராணிப்பேட்டையில் மாபெரும் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை! தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்!
“கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்” நிறுவனத்தின் இ-மொபிலிடி பிரிவான க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மூலம் 700 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டையில் 35 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக செயல்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
கிரீவ்ஸ் ஆலை இந்த நிதியாண்டில் இறுதிக்குள் 1.20 லட்சம் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும். மேலும் எதிர்காலத்தில் உற்பத்தியை படிப்படியாக 1 மில்லியன் யூனிட்டாக அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த உற்பத்தி ஆலையில் பணியாற்றுபவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் பெண்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. தொடர்ந்து பல்வேறு பெரிய ஆலைகள் பெண் தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தொழிற்சாலைகளை உருவாக்குவது ஓலா நிறுவனம் ஓசூர் கிருஷ்ணகிரி அருகே துவங்கும் தொழிற்சாலையில் இருந்து துவக்கப்பட்டது.