இந்திய பாரம்பரிய இரு சக்கர வாகன நிறுவனங்கள் மின்சார வாகனப் புரட்சியை எதிர்கொள்ள ஆராய்ச்சி
இந்திய பாரம்பரிய இரு சக்கர வாகன நிறுவனங்கள் — ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஐசர் மோட்டார்ஸ் — மின்சார வாகனப் புரட்சியை எதிர்கொள்ள ஆராய்ச்சி, புதுமை முதலீட்டில் பெருமளவில் செலவழிக்க தொடங்கியுள்ளன.
2020-21 இல் ₹1,595 கோடி இருந்த மொத்த ஆராய்ச்சி செலவு, 2024-25 இல் 107% உயர்ந்து ₹3,304 கோடியாகியது. ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் ஆகியவை முதன்முறையாக ₹1,000 கோடி வரம்பைத் தாண்டின.
ஹீரோ தனது செலவினத்தை 93% உயர்த்தி ₹1,040 கோடியாக உயர்த்தியது; 2010 இல் இருந்த ₹30 கோடிக்குச் சுமார் 33 மடங்கு வளர்ச்சி. FY25-இல் மட்டும் 170 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டன.
ஜெய்ப்பூர் CIT, மியூனிக் HTCG போன்ற மையங்கள் மூலம் உலகளாவிய புதுமையை விரிவுபடுத்தியுள்ளது.
சென்னை தலைமையகமுடைய டிவிஎஸ் மோட்டார், FY21-இல் ₹331 கோடியில் இருந்த செலவை 210% உயர்த்தி FY25-இல் ₹1,025 கோடியாக்கியது. 2,000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பல முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டிவிஎஸ், ஹெல்மெட் கண்ணாடியில் AR அடிப்படையிலான HUD அமைப்பு, நேரடி வழிகாட்டல், சார்ஜிங் நிலைய விபரம் போன்ற அம்சங்களை உருவாக்குகிறது. சுதர்ஷன் வேணு தற்போது நிறுவனம் முழுமையாக EV நோக்கில் நகர வழிநடத்துகிறார்.
பஜாஜ் ஆட்டோ தனது செலவை 47% உயர்த்து ₹626 கோடியாக்கியுள்ளது. தனிப்பட்ட பவர்ட்ரெயின், கட்டுப்பாட்டு அமைப்பு, இணைப்பு தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
ஐசர் மோட்டார்ஸ் (ராயல் என்ஃபீல்டு) FY21-இல் ₹299 கோடியில் இருந்ததை FY25-இல் ₹613 கோடியாக இரட்டிப்பாக்கியுள்ளது. 2026 இல் “ராயல் என்ஃபீல்டு ஃப்ளையிங் ப்ளீ C6” எனும் முதல் EV வெளியீட்டுக்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில், புதிய நிறுவனங்களும் தீவிர முதலீடு செய்து வருகின்றன.
ஓலா எலக்ட்ரிக் FY25-27 இடையே ₹1,600 கோடி ஒதுக்கியுள்ளது. அதர் எனர்ஜி FY22-24 காலத்தில் ₹520 கோடி முதலீடு செய்துள்ளது.
இவ்வாறு, பாரம்பரிய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்கள், உலக சந்தைகளை குறிவைத்து EV துறையில் பெரும் முன்னேற்றத்தை நோக்கி செல்கின்றன.
