வங்கிகள் குறித்து ஜாம்பவான் வாரனின் வாக்கு!!!..
உலகளவில் பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு வாரன்பஃபெட் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.. அத்தனை பெரிய அனுபவம் வாய்ந்த பெருங்க கோடீஸ்வரரான 92 வயது வாரன் அண்மையில் ஜப்பானில் சில நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவரின் நிறுவனமான Berkshire Hathway நிறுவனம் செய்த முதலீடுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வருங்காலங்களில் வங்கிகள் சரிவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி அதிர வைத்தார். போலியாக கணக்கு காட்டுவதை சில வாங்கிகள் செய்வதால் அவர்கள் மட்டும் சிக்கலில் சிக்காமல் அவர்கள் வங்கியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் பணத்தையும் சிக்கலில் சிக்க வைப்பதாக அந்த ஜாம்பவான் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சிலர் அவ்வாறு செய்து வந்ததாக கூறும் வாரன் , தற்போது வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளதால் இனி வங்கிகள் சறுக்கலை சந்தித்தாலும் அதனை சரிசெய்துகொள்ள முடியும் என்றார். எனினும் மக்கள் தங்கள் பணம் குறித்து கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அண்மையில் சறுக்கிய சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகள் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய இரண்டு மற்றும் 3-வது வங்கிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2008-ல் லேமன் பிரதர்ஸ் நிறுவன சறுக்கலின் போது வாரன் பஃபெட் தனது பணத்தில் 5 பில்லியன் டாலரை கோல்ட்மேன் சாச்ச்ஸ் நிறுவனத்திற்கும், 2011ம் ஆண்டு அமெரிக்க வங்கி திவாலாகும் போது 5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் தந்து உதவியிருந்தார். அவர் கணிப்புகள் பல நேரங்களில் மிகச் சரியாகவே இருந்துள்ளன. வங்கிகள் வருங்காலத்தில் திவாலாகும் சூழல் வந்தாலும் சாதாரண பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.