பைஜூஸுக்கு கடன் கொடுத்தோர்,வாங்கியோரை விசாரிப்பதால் பரபரப்பு
பிரபல கல்வித்துறை சார்ந்த நிறுவனமாக திகழ்கிறது பைஜூஸ், இந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களை விசாரிக்க அமலாக்கத்துறையினர் தீவிர திட்டம் தீட்டி வருகின்றனர். வெளிநாட்டு நிதியை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்களா என்ற கோணத்தில் FEMA சட்டப்படி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பைஜூஸ் ரவீந்திரன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்து வரும் நிலையில் அவர் சரியான பதில் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் எந்த விதவிதிமீறலிலும் தங்கள் நிறுவனம் ஈடுபடவில்லை என்றும் ரவீந்தரன் தரப்பு மறுத்துள்ளனர். குறிப்பிட்ட இந்த நிறுவனம் குறுகிய காலகட்டத்தில் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துமதிப்பை கொண்டிருக்கிறது. அண்மையில் சட்டவிரோத வெளிநாட்டு பணம் கையாளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு ரவீந்திரன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கோயல் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோயல் அண்மையில்தான் வேதாந்தா நிறுவனத்தில் இருந்து பைஜூஸ் நிறுவனத்துக்கு பணி மாற்றம் பெற்றார். வெளிநாட்டு மாணவர்கள் எவ்வளவு பணம் கட்டணமாக செலுத்தினர், எத்தனை ரூபாய்க்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன,விளம்பரம் மற்றும் சந்தை செலவுகள் எவ்வளவு உள்ளிட்ட கேள்விகளுக்கு ரவீந்திரன் தான் பதில் தரமுடியும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கேமன் தீவுகளில் இருந்து எவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்தது உள்ளிட்ட கேள்விகள் பைஜூஸ் நிறுவனத்தின் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்டது.