வெளிப்படையா இருக்கோம் ஆமா…
இது என்னடா பொருளாதாரத்துக்கு வந்த சோதனை என்று புலம்பாத குறையாக யாரைப் பார்த்தாலும் மெத்தப் படித்த மேதாவிகள் போல பேசத் துவங்கிவிட்டனர். இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் அங்கு சென்று இந்திய பொருளாதாரத்தின் அருமை பெருமைகளை பாடம் எடுத்துள்ளார். அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கு சென்றவர் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களை இந்தியாவுக்கு வரும்படி அழைத்தார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் இந்தியாவின் பொருளாதாரம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் முற்போக்கு தனமான சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளதாக பேசினார். இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தை வெளிப்படைத் தன்மையுடன் ஆக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பிடித்திருப்பதாகவும் அங்கு அவர் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் கேந்திரமாகவும் இந்தியா இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மக்களை ஏழை நிலையில் இருந்து வெளியே கொண்டுவர முயற்சிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கி அதிகாரிகளை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.