நினைப்பதை செஞ்சு முடிச்சே தீருவோம் ஆமா..!!!
இந்தியாவில் மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகளில் இரண்டை மட்டும் தனியார்மயப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடி அரசின் சாதனைகளை பட்டியல்போட்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் 2021-22 ஆண்டுகளில் கூறியதைப் போலவே அரசு வங்கிகளை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் லேசான முன்னேற்றம் காணப்படுகிறது என்றார். ஐடிபிஐ வங்கி இல்லாமல்,சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றை தனியார் மயப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அரசு வங்கிகளை தனியார்மயப்படுத்த பல்வேறு விதிகளில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளதால் அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு அரசுத்துறை வங்கிகளைத் தவிர்த்து ஒரு காப்பீட்டு நிறுவனத்தையும் தனியாரிடம் விற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள தற்போதைய அரசு,கையில் எடுக்கும் அரசுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக மாறி வருவதால் அடுத்து எந்த நிறுவனத்தை விற்கலாம் என்று மறு பரிசீலனை செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Bank of Baroda, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Indian Bank, Indian Overseas Bank, Punjab & Sind Bank, Punjab National Bank, State Bank of India, UCO Bank, Union Bank of India ஆகிய வங்கிகளில் எதை விற்கலாம் என்று அரசு யோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.