லேப்டாப் லைசன்ஸ் விவகாரம் தெரிஞ்சிக்குவோம் வாங்க..!!!!
இந்தியாவிலேயே லேப்டாப்,கணினிகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அண்மையில் திடீரென வெளிநாடுகளில் இருந்து உரிமம் இல்லாத லேப்டாப்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் அதிர்ந்து போன லேப்டாப் உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியிருந்தனர். இந்த சூழலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி டேப்லெட் வகை கணினிகள் விலையேற்ற சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, லேப்டாப்கள் விலை அளவுக்கு அதிகமாக விற்கப்படுகிறதா என்று சரிபார்க்க தயங்காது என்றும் அறிவித்துள்ளது. இறக்குமதி உரிமம் கிடைக்க வேண்டும் என்பதற்காக லேப்டாப்களின் விலை 4 முதல் 5 விழுக்காடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதற்கு பதிலாக இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு விதிக்க திட்டமிட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சீன நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு நிலைமை என்னவாக இருக்கும் என்று மத்திய அரசு கண்காணிக்கும் என்று கூறியுள்ள அதிகாரி ஒருவர்,வரும் 3 மாதங்களில் அளவுக்கு அதிகமான கணினிகள் இறக்குமதி செய்யவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அடிப்படையான லேப்டாப் தற்போது விற்கப்படும் விலையைவிட 1,700 முதல் 3,400 ரூபாய் வரை விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் நினைத்தால் உடனே லேப்டாப் உற்பத்தி ஆலைகளை தொடங்க முடியாது என்று கூறியுள்ள நிபுணர்கள் புதிதாக நிறுவனத்தை நிறுவ வேண்டுமானால் 9 முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அவர்களுக்கு தேவையானா உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா,மலேசியா,வியட்நாம்,தென்கொரியாவில் இருந்து உதிரி பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அவற்றை ஒருங்கிணைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.