நம்மாளுங்க வேல அமெரிக்கா காரங்களுக்கு ஈக்வலா இருக்கும்…!!!
எதிரியா இருந்தாலும் கூட்டத்துல ஒருந்தர் நல்லத பேசுவார்ல அதே பாணியில் தான் ஆளும் பாஜக அரசில் நிதின்கட்கரி தனது வெளிப்படையான பேச்சின் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த நிலையில் நிஜமாகவே நம் நெடுஞ்சாலைகள் அடுத்தாண்டு அமெரிக்காவுக்கு நிகராக இருக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார். ரயில்வே மேம்பாலம், அதிவிரைவு பசுமை சாலைகள்,விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் பாரத் மாலா திட்டம் 2 செயல்படுத்தப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பு மிகவும் பெரியதாக இருக்கும் என்று கூறியுள்ள நிதின் கட்கரி , இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் இந்த சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். நடப்பாண்டில் மட்டும் 16ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே மேம்பாலம் கட்டுப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தொகை 50ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார். கைலாஷ் மான்சரோவர் இடையேயான நெடுஞ்சாலைப்பணிகள் முடிவுற்றால் பயண நேரம் வெகுவாக குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாரத் மாலா திட்டம் 2-ல் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூர சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றன.Bharatmala Pariyojana என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் 35ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட இருக்கிறது நாட்டின் 580 மாவட்டங்களில் இதற்கான பணிகள் நடத்தப்பட இருக்கின்றன. ஜார்க்கண்டில் மட்டும் 70ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றன. ஒடிஷா, சத்தீஸ்கர்,மேற்குவங்கம்,பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் சாலை வசதி மேம்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.