LIC IPO விக்க நாங்க ரெடி..வாங்க நீங்க ரெடியா..!?
ஆயுள் காப்பீட்டு நிறுவன ஐபிஓவை அரசாங்கம் விரைவில் கொண்டு வரும் என்று நம்புவதாக முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) செயலர் கூறியதாக ஊடக நிறுவனங்கள் தெரிவித்தன.
எல்ஐசி ஏற்கனவே அதன் IPO-ஐ வெளியிடுவதற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால், பாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் பங்கு விற்பனைக்கான மந்த நிலைமை ஆகியவற்றைக் காரணம் காட்டி வணிக வங்கியாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
பாரத் பெட்ரோலியம் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷனின் விற்பனைத் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் பல தடைகள் மற்றும் தாமதங்களைக் கண்டுள்ளன என்று அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
“உலகளாவிய சந்தைகள் நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்கின்றன, இது சரியான சந்தர்ப்பம் என்று நான் நினைக்கவில்லை,” என்று ஷிப்பிங் கார்ப் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஹர்ஜீத் கவுர் ஜோஷி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இதற்கிடையில், பாரத் பெட்ரோலியத்தை வாங்குபவரைக் கண்டுபிடிக்க அரசாங்கம் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது.