பங்கு வேணுமா.. – கட்டாயம் பான் கார்டு வேணுங்க..!!
LIC-யின் பங்குகளை வாங்குவதற்கு பாலிசிதாரர்கள் வரும் 28-ம் தேதிக்குள் பான் கார்டு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குகளை விற்கும் LIC:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வரைவு அறிக்கை தாக்கல்:
இந்த நிலையில், IPO-வுக்கான வரைவு அறிக்கையை பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் எல்ஐசி நிறுவனம் கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தது. எல்ஐசியில் 100 சதவீத பங்குகள் அல்லது 632.49 கோடிக்கும் அதிகமான பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது. ஒரு பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாக இருக்கிறது.
பங்கு வாங்க பான் கார்டு:
இந்த நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் ஏலம் எடுக்க விரும்பும் எல்ஐசி பாலிசிதாரர்கள், தங்கள் பாலிசியை பான் உடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாலிசியை பான் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி கட்-ஆஃப் தேதியாக பிப்ரவரி 28-ம் தேதியை LIC அறிவித்துள்ளது. மேலும், தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்திராத பாலிசிதாரர்கள் தங்கள் முகவர்களிடம் அதைச் செய்யச் சொல்லலாம் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.