அரசாங்கத்துக்கு 3662 கோடி டிவிடண்ட் தரும் எல்ஐசி..
அண்மையில் ரிசர்வ் வங்கி,தன்வசம் இருந்த 2.11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு டிவிடண்ட் ஆக அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதே பாணியில் மற்றொரு வரிவருவாய் ஆதாரம் உள்ள ஒருநிறுவனமாக எல் ஐசி தகழ்கிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்ஐசி நிறுவனம், 3 ஆயிரத்து 662 கோடி ரூபாய் பணத்தை டிவிடண்ட்டாக மத்திய அரசுக்கு அளிக்க இருக்கிறது.
ஒரு பங்குக்கு 6 ரூபாய் டிவிடண்ட்டாக அளிக்கவும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலகட்டத்தை கணக்கிட்டு டிவிடணட்டாக அளிக்கப்பட உள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு 96.5 விழுக்காடாக உள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடனான காலகட்டத்தில் 13,782 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தை விடவும் 4.5 விழுக்காடு அதிகமாகும். மொத்த அளவில் 58.87 விழுக்காடு முதல்முறை பாலிசி எடுப்பவர்களாக உள்ளனர்.
எல்ஐசி பிரீமியம் தொகையாக மட்டும் 4.75,070 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்தாண்டு 4.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 51,21,887 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எல்ஐசி நிர்வகித்து வருகிறது.
கடந்த மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஓராண்டில் மட்டும் எல்ஐசி, 2.03 கோடி பாலிசிகளை விற்றுள்ளது. இப்படியாக கடந்தாண்டைவிட அதிக வளர்ச்சியை அடைந்துள்ள எல்ஐசி நிறுவனம் மத்திய அரசுக்கு 3,662 கோடி ரூபாய் நிதியை டிவிடண்ட்டாக அளிக்க முடிவு செய்திருக்கிறது.