பதஞ்சலியின் 14 பொருட்களுக்கு லைசன்ஸ் கட்..
பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களின் உரிமத்தை உத்தராகண்ட் மருந்து கட்டுப்பாட்டு சங்கம் ரத்து செய்திருக்கிறது. அறிவியல்பூர்வமான மருந்துகளை அளிப்பதாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சில பொருட்களை விளம்பரப்படுத்தி பெரிய லாபத்தை பதிவு செய்திருந்தது. இதற்கான எந்த ஆதாரமும் ராம்தேவிடம் இல்லை. இந்நிலையில் தவறான விளம்பரம் செய்த காரணத்தால் 14 பொருட்களின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவை உச்சநீதிமன்றம் கடுமையாக வறுத்து எடுத்த நிலையில் அவரின் நிறுவனத்தில் இந்த புதிய சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பிட்ட அந்த 14 பொருட்களில் ஆஸ்துமா, நீரிழிவு நோய், பிராங்கைடிஸ் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளும் பதஞ்சலி நிறுவனம் உருவாக்கி வந்தது. உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்டித்து வந்தபோதும் விளம்பரங்களை வெளியிட்டு வந்ததால் கடுப்பான உச்சநீதிமன்றம், ஒரு கட்டத்தில் நிதானம் இழந்தது. இந்நிலையில் தங்கள் நிறுவனம் செய்தது தவறுதான் என்றும், நாளேடுகளில் மன்னிப்பு கோரி விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2 முறை நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரியபோதும் அதனை நீதிபதிகள் அற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.