வெண்ணிலா கபடி குழு சூரி போல கோட்டை முதலில் இருந்து போடும் அதானி
ஒரு பெரிய நிறுவனம்,தாங்கள் வணிகத்தை மேம்படுத்தும்போது பங்குச்சந்தைகள் மூலம் நிதி திரட்டி மூலதனமாக மாற்றுவது வழக்கம் இந்த நடைமுறையை தொடர்ந்து செய்வதை FPO என்பார்கள். இந்த வகை பங்கு வெளியீட்டு அறிவிப்பு ஒரு முறை அல்ல பல முறை நிறுவனங்கள் செய்து வருகின்றன. அந்த வகையில்தான் அதானி 20ஆயிரம் கோடி ரூபாயை பங்குகள் மூலம் திரட்ட முற்பட்டார். அதற்குள் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளதால் அதானி குழும பங்குகள் அநியாயத்துக்கு சரிந்துவிட்டது. பங்குகள் விலைதான் சரிகிறது என்று பார்த்திருந்த சூழலில் , FPO வெளியிட்ட 20ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப அளிக்க அதானி திட்டமிட்டுள்ளார். இதனால் யாரெல்லாம் அதானியின் FPOவில் பணம் போட்டார்களோ அவர்களுக்கு எல்லாம் பணம் திரும்ப அளிக்கப்பட இருக்கிறது. முதலீட்டாளர்கள் நலன்கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாக அதானி விளக்கம் அளித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதானி குழுமத்தின் பேலன்ஸ் ஷீட் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக கவுதம் அதானி தெரிவித்திருந்த சூழலில் அந்நிறுவன பங்குகள் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன.ஹிண்டன்பர்க் அறிக்கையால் மட்டும் கவுதம் அதானியின் 10 நிறுவனங்களில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. 5 நாட்களில் மட்டும் இந்த சரிவு பதிவாகியுள்ளது.112% பங்குகள் FPOவில் வாங்கப்பட்டிருந்தாலும், நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்திருந்தவர்களுக்கு பணத்தை திரும்பத் தரகடைமைபட்டுள்ளதாகவும், பங்குச்சந்தை சூழல் சரியில்லாத காரணத்தால் இதனை செய்துள்ளதாகவும் கவுதம் அதானி தெரிவித்தார்