அம்மையாரே சொல்கிறார் கேளுங்க…!!!
இந்தியாவின் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்த கடன் என்பது 155 லட்சம்கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 57.3% ஆகும். வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டுள்ள கடன் என்பது வெறும் 7.03லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே உள்ளதாகவும், இது இந்திய கடனில் வெறும் 4.5% மட்டுமே என்றும் நிதியமைச்சர் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளியில் இருந்து வாங்கப்பட்ட கடன் என்பது மிகக்குறைவான அபாயம் கொண்ட சாதாரண கடன்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பணத்துக்கு நிகரான இந்திய ரூபாயின் புழக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருவதாக நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டுள்ளார்.வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கும் அளவை 1.5பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டக்கூடாது என்று கணக்கை சரியாக பரமாரித்து வருவதாகவும் நிதியமைச்சர் தனது எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உள்நாட்டில் நிலவிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட, பேமண்ட் வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கம்பிகட்டியுள்ளார்…