லோன் வாங்கும் விகிதம் டிசம்பர் காலாண்டில் குறைந்திருக்கு…
விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி எத்தனையோ முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் வீட்டுக்கடன்களின் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு எங்கேயோ போய்அமர்ந்துகொண்டுள்ளது. இதனை புரிந்துகொண்டுள்ள மக்கள், வீடுகளை வாங்கவும், வாங்கிய வீட்டுக்கு ஹோம் லோன் எடுக்கவும் டிசம்பர் காலாண்டில் தயக்கம் காட்டியுள்ளனர் என்கிறது புள்ளி விவரம். யார் எவ்வளவு கடன் வாங்குகிறார்கள் அவர்கள் எந்த வகை கடன் வாங்குகின்றனர் என்ற விவரம் சிபில் என்ற அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டிசம்பருடன் முடிந்த காலாண்டில் கடந்தாண்டைவிட 6% குறைவாக வீட்டுக்கடன்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது கடந்தாண்டு வீட்டுக்கடன் விகிதம் குறைந்தபட்ச அளவு 6.5%ஆக இருந்தது. மே2022ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களால் மகிக்குறைந்தபட்ச வீட்டுக்கடன் விகிதம் 8.5%ஆக உயர்ந்துள்ளது. பலர் வீட்டுக்கடன் மட்டுமின்றி தனிநபர்கடன்களை வாங்குவதையும் குறைத்திருப்பதாகவும், வங்கிகள் தகுதியில்லாதவர்களுக்கு லோன்களை தருவதை குறைத்துள்ளதாகவும் அந்த சிபில் அறிக்கை தெரிவிக்கிறது. நிலைமையை இப்படி இருக்கையில் பாதுகாப்பு இல்லாத கடன் வழங்கும் அளவு 26விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த மதிப்பு மட்டும் 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கிராமபுறங்களில் 18 வயது முதல் 30 வயதுள்ளோர் கடன்கள் வாங்கும் வகிதம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.