மறுபடியும் உயரப்போகுது கடன் விகிதம்!!!
ஒரு நாட்டின் பணவீக்கம்தான் நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் முக்கிய அம்சமாகும். இந்த பொருளாதாரத்தை 6 விழுக்காட்டுக்குள் வைத்திருக்கு ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு ஒரு சில மாதங்கள் மட்டுமே விலைவாசி 6 விழுக்காடாக இருந்தது. மற்றபடி பல மாதங்களில் இந்த அளவானது 6விழுக்காட்டுக்கும் அதிகமாகவே இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடன்களின் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் கடன் மீதான வட்டிவிகித்ததை மேலும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி கொள்கை குழு கூட்டம் வரும் 3,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. அடுத்த நிதியாண்டு துவங்கியதும் நடக்கும் முதல் நிதிக்கொள்கை குழு கூட்டம் என்பதால் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்த திட்டமிட்டுருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அண்மையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாலும், பிரிட்டனில் உள்ள மத்திய வங்கியும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள சூழலில் அதன் பாதிப்பாகவே இந்தியாவிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட இருக்கிறது.கடந்தாண்டு மே மாதம் முதல் இதுவரை 225 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளன. இன்னும் ஒருமுறை உயர்ந்தால் வட்டி விகிதம் 6.50% ஆக இருக்கும். அடுத்த நிதியாண்டில் மட்டும் 6 வகையான MPC எனப்படும் நிதிக்கொள்கை கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. உலகளவில் பல்வேறு நிகழ்வுகளால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படும் நிலையில் மற்று நாடுகளைவிட இந்தியாவில்தான் பாதிப்பு குறைவு என்றும் ரிசர்வு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.