6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு….
வங்கி நடத்துவது ஒன்றும் அத்தனை எளிதல்ல என்று கூறும் வகையில் பலதரப்பட்ட பாதுகாப்பு சிக்கல்களை வங்கிகள் தினந்தினம் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் நிதிமோசடி சார்ந்த குற்றங்கள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. வங்கித்துறையில் உள்ள டிரண்ட்கள் என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் மோசடிகள், வங்கிகளில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக 66.2%ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில்தான் இத்தகைய மோசடிகள் அதிகம் நடந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பொதுத்துறை வங்கிகளில் அப்படி என்ன பிரச்னைகள் இருக்கின்றது என்று பார்த்தால் முன்பணம், சார்ந்த பிரச்னையும், தனியார் வங்கிகளில் கார்டு, இணைய வங்கி சேவை மற்றும் ரொக்கப்பணம் சார்ந்த பிரச்னைகள் அதிகம் பதிவாகியிருக்கிறதாம். 2023-24 நிதியாண்டின் முதல் பாதியில் மிக அதிகளவு வங்கி மோசடிகள் பதிவாகியிருக்கும் நிலையில், இரண்டாவது பாதியில் 14.9%குறைந்திருக்கிறதாம். 2022-23 நிதியாண்டில் அபராதத்தொகையானதை முறைப்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே வசூலித்திருப்பதாகவும், பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் அபராதம் வசூலிக்கும் அளவு மிகவும் குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.