பங்குகளை திரும்ப வாங்குகிறது L&T…
கட்டுமானத்துறையில் பெயர்பெற்று விளங்கும் நிறுவனம் larsen &tubro நிறுவனம்.இந்த நிறுவனம் தனது பங்குகளை சந்தையில் இருந்து திரும்பப்பெற முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக அந்நிறுவனத்தில் இயக்குநர்கள் கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் 10ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கிக்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மொத்தம் 3.33 கோடி பங்குகள் அதாவது 2.4%ஈக்விட்டி ரக பங்குகள் திரும்பப்பெற வாய்ப்புள்ளது. ஒரு பங்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க அந்நிறுவனம் திட்டம் வகுத்து வருகிறது. முதலீட்டாளர்களிடம் தற்போது 21.78% பங்கும்,அந்நிறுவன ஊழியர்கள் டிரஸ்ட்டில் 13.7%பங்குகளும்,உள்ளன. எனினும் எவ்வளவு ரூபாய்க்கு பங்குகளை அந்நிறுவனம் திரும்பப்பெறும் என்று எந்த தரவுகளும் பெரிதாக வெளியாகவில்லை. அதனை இயக்குநர்கள் குழுவே தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கு ஒருபங்குக்கு 6 ரூபாய் டிவிடண்ட் வரும் என்றும் வரும் 2ஆம் தேதிரெக்கார்ட் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 14ஆம் தேதிக்குள் டிவிடண்ட் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் இந்நிறுவனம் 46.5% கூடுதல் லாபம் பார்த்துள்ளது. இது நிபுணர்களின் கணிப்பை விடவும் அதிகமாகும்.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் லாபம் 2,493 கோடி ரூபாயாக இருந்தது குறிப்படத்தக்க அம்சமாகும்.