மகாபிரபு!!! நீங்க இங்கையும் வந்துடீங்களா??
ஜெஎஸ்டபிள்யூ என்ற நிறுவனம் இந்தியாவில் பலதுறைகளில் கால் பதித்த பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை சஜ்ஜன் ஜிண்டால் நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் அடுத்ததாக மின்சார கார்களை தயாரிக்க உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சேஷாகிரி ராவ் என்பவர் அந்த நிறுவனத்தில் முதன்மை நிதித்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் அண்மையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் மின்சார 4 சக்கர வாகனங்கள் உற்பத்தி மிகவும் தேவைப்படுவதாகவும், இந்த சந்தை அதிகம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த மின்சார கார்கள் உற்பத்தி எங்கு தொடங்கப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெஎஸ்டபிள்யு நிறுவனம் தமிழ்நாட்டின் சேலத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் ஸ்டில் உற்பத்தி செய்து வருகிறது. 22 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஜெ.எஸ்டபிள்யு நிறுவனம் ஆற்றல், உள்கட்டமைப்பு,சிமெண்ட்,பெயிண்ட் மற்றும் விளையாட்டுத்துறையில் அதீத ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மின்சார கார்களையும் அந்நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.