மகாபிரபு !!! நீங்க இங்கையும் வந்துடீங்களா?
உலகத்தில் பெரிய விமான நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களுக்கு அமெரிக்க விமான நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களைத் தான் நம்பியுள்ளனர். இந்த நிலையை மாற்ற விரும்பிய சீன வணிக விமான அமைப்பான COMACநாமே ஒரு விமானம் உற்பத்தி செய்தால் என்ன என்று கருதி கடந்த 2017ஆம் ஆண்டே உற்பத்தியை தொடங்கியது. பலதரப்பட்ட சோதனைகள், பல்வேறு கட்ட பரிசோதனைகள்,உரிமத்துக்காக காத்துக்கிடந்த காலம் எல்லாம் முடிந்து c919என்ற புதிய விமானத்தை சீனா அதிகாரபூர்வமாக வர்த்தக பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. முதல் பயணிகள் விமானம் ஷாங்காயில் இருந்து பெய்ஜிங்குக்கு வெற்றிகரமாக 160 பயணிகளுடன் பறந்தது. இந்த விமானத்துக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.ஷாங்காய்க்கும் பெய்ஜிங்குக்கும் இடையேயான பறக்கும் நேரம் வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் தான் கடுமையான வெயில்,கடும் பனிப்பொழிவு, மழைக்காலங்கள், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்கிறதா என்று இத்தனை ஆண்டுகள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வந்தது. அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்ற சி919 விமானம், வணிக ரீதியில் வெற்றியை ருசித்துள்ளது. இதன் காரணமாக சீனாவிடம் ஏராளமான நாடுகள் விமானம் செய்யச் சொல்லி ஆர்டர்களை குவித்து வருகின்றனர். ஆயிரத்து 35 விமானங்களை செய்து தர ஆர்டர்கள் குவிந்துள்ளன. சீனாவின் தனி அமைப்பு முயற்சி செய்து சொந்தமாக விமானத்தையே உருவாக்கியுள்ளதால் , இனி ஏர்பஸ், போயிங் நிறுவனங்களை நம்பியிருக்கத் தேவை குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச சந்தையிலும் மிகப்பெரிய முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.