பெருசா களம் இறங்கும் மகேந்திரா&மகேந்திரா!!
மின்சார கார்களை உற்பத்தி செய்ய மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.இந்த கார்கள் மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உற்பத்தி செய்ய இருக்கின்றன அடுத்த 7அல்லது 8 ஆண்டுகளில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டு கார்கள் தயாராக இருக்கின்றன. மின்சார கார்களை உற்பத்தியை செய்ய மகாராஷ்டிரா அரசும் மத்திய அரசும் போதிய ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், அந்நிய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படுவதாகவும் மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போதுள்ள ஹாரியர்,நெக்சான் ரக டாடா கார்களுக்கு போட்டியாக அதே விலையில், அதே மாடலின் காப்பியாக கூட கார்களை தயாரிக்க மகேந்திரா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. தற்போதுள்ள பெட்ரோல்,டீசல் கார்களுக்கு மாற்றாக 2030ம் ஆண்டுக்குள் மின்சார கார்களை பயன்படுத்த மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 66%வரவேற்பு உள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் 39ஆயிரத்து 329 கார்கள் விற்கப்பட்ட நிலையில்,நடப்பாண்டு அக்டோபரில் இந்தியாவில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 971 மின்சார கார்கள் விற்கப்பட்டுள்ளன.