வேகமா ஓடும் மகிந்திரா & மகிந்திரா..!!
மகிந்திரா & மகிந்திரா நிறுவனம்:
இந்தியாவில் விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் M&M குழுமமானது தலைமை வகிக்கிறது. இது உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகும். M&M
குழுமம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விவசாயம், தளவாடங்கள், விருந்தோம்பல் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
M & M விற்பனை அதிகரிப்பு:
கடந்த 2021 ஜனவரியில், ஒட்டுமொத்தமாக 39,149 வாகனங்களை விற்பனை செய்த இந்நிறுவனம், தற்போது 46,804 வாகனங்களை விற்று இரட்டை இலக்க வளர்ச்சியடைந்துள்ளது. பயணிகள் வாகனப் பிரிவில், 19,964 வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3% குறைவாக உள்ளது. வணிக வாகனங்கள் பிரிவில், நடப்பு ஆண்டில், மகிந்திரா & மகிந்திரா 21,111 வாகனங்களை விற்பனை செய்து 58% வளர்ச்சி கண்டுள்ளது.
M & M ஏற்றுமதி :
2022 ஜனவரி மாதத்துக்கான ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25% அதிகரித்து 2,861 வாகனங்களாக இருந்தது. ஜனவரி 2022-ம் ஆண்டில், இந்நிறுவனத்தின் பண்ணை உபகரணத் துறை 22,682 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் விற்கப்பட்ட 34,778 டிராக்டர்களுடன் ஒப்பிடும்போது 35% குறைவாகும்.
2022 ஜனவரியில், உள்நாட்டு விற்பனை 21,162 யூனிட்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜனவரியோடு ஒப்பிடும்போது 33,562 யூனிட்களாக இருந்தது. இது ஆண்டுக்கு 37% குறைந்துள்ளது. மாதத்திற்கான ஏற்றுமதி 1,520 யூனிட்டுகளாக இருந்தது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தற்போது BSE-ல் பங்குகள் ரூ.870.30-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.