வரும் 28ஆம் தேதி ரிலையன்ஸின் முக்கிய நிகழ்வு!!!!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமான நிறுவனமாக திகழ்கிறது..இந்தநிறுவனத்தின் 46ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி கணக்கிட்டு பங்கு வைத்திருப்போருக்கு ஒரு பங்குக்கு 9 ரூபாய் என்ற டிவிடண்ட் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வியாபார விரிவாக்க திட்டம், புதிய அறிவிப்புகளை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அனைவரின் கவனமும் முகேஷ் அம்பானியின் அறிவிப்பின் மீதே இருக்கிறது.ஜியோ நிதி சேவைகள் குறித்த அறிவிப்பு பிரதானமாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜியோவின் நிதி சேவை நிறுவனம் ஏற்கனவே பங்குச்சந்தைகளில் தற்காலிக அடிப்படையில் உள்ளே நுழைந்துள்ளன. விரைவில் இது அதிகாரபூர்வமாக பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிளாக் ராக் நிறுவனத்துடன் இணைந்து கடன் தரும் பணிகளில் ஜியோ நிறுவனம் ஈடுபட இருக்கிறது. பிளாக்ராக் நிறுவனம் ஜியோ நிதி நிறுவனத்துடன் சேர்த்து 540 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது. கடந்தமாதம் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் தனது பங்குகளை 1071 கோடி ரூபாய்க்கு திரும்ப வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தது. ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் இந்தாண்டும் காணொலிவாயிலாகவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி தேசிய பங்குச்சந்தைகளில் ரிலையன்ஸ் பங்குகள் 1.4%வரை ஏற்றம் கண்டுள்ளன.ஒரு பங்கின் விலை 2,509 ரூபாயாக இருக்கிறது. 13விழுக்காடு வரை இந்த பங்கு லாபத்தை ஈட்டியுள்ளது. நிஃப்டியில் இது 7%வரை லாபத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.